உழைத்து களைத்து போகையில் - Ulaithu Kalaiththu Pogaiyil

 உழைத்து களைத்து போகையில் - Ulaithu Kalaiththu Pogaiyil


உழைத்து களைத்து போகையில் 

விசுவாசம் குன்றி குறுகையில்(2)

இருக்கிறேன் என்று சத்தமே 

கேட்குதே என் அருகிலே(2) 


கூப்பிடும் யாவருக்கும் 

கர்த்தரே என்றும் சமீபம்

வேண்டியும் யாவருக்கும் 

இரட்சிப்பைத் தரும் தெய்வம்


ஏற்ற நேரத்தில் சகாயரே 

கிடைக்கப் பெற்றேன் உம் கிருபையே(2)

பிழைத்துக் கொண்டேன் வாழ்விலே 

அழைத்தவர் என் அருகிலே(2) - கூப்பிடும் யாவருக்கும் 

                            

விசுவாசத்தின் துவக்கமே 

முடித்தும் வைப்பவர் நீர்தானே (2)

பொறுமையோடே ஓடுவேன்

பந்தய பொருளை நாடுவேன்(2) - கூப்பிடும் யாவருக்கும்

                     


உழைத்து களைத்து போகையில் - Ulaithu Kalaiththu Pogaiyil

إرسال تعليق (0)
أحدث أقدم