தேவ லோகமதில் - Deva Logamathil
பல்லவி
தேவ லோகமதில்
சேவிப்பார் தூயவர்கள்.
அனுபல்லவி
மாவலராகிய தேவன்றன் பலத்தால்-ரீ
பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். - தேவ
சரணங்கள்
1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல
மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும்
ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ-
நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். - தேவ
2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா
பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும்,
துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ-
துணிவுடன் முற்றிலும் ஜெயித்த விசுவாசிகள். - தேவ
3. பாரத்தையும், தமை நெஞ்கிய பாவத்தையும்,-தள்ளிப்
பட்சமுறும் யேசுரட்சகர்மீது தம் பார்வையை வைத்து என்றும்
வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர்,-ரீ-
வேகும் அக்கினியின் உக்கிரம் அவித்தவர். - தேவ
4. ஜெயங் கொள்ளுவோர் பரதீசினில் வீற்றிருப்பார்,-வாடா
ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார், ஜீவகனி புசிப்பார்,
வியப்புறு புது நாமம், வெள்ளுடை பெற்றுமே-ரீ-
விடிவெள்ளியாய் நித்யம் விளங்கி ஜொலித்திடுவார். - தேவ
Deva Logamathil
Seavippaar Thuyavarkal
Maavalaraagiya Devantran Palaththaal Ree
Poovinil Jeeviththu Pugalurum Jeyam Pettraar
1.Vaanamandala Polla Aaviyin Seanaiyodum Pala
Maana Thuraithanam Athikaaram Pirapanja Athipathiyivarkalodum
Ganamaai Deva Sarvaayutham Thariththu Ree
Nalamudan Poraadi Ulaginil Jeyam Kondaar
2.Pattayam Nirvaanam Pasi Naasa Mosangalum Maa
Paadu Viyaagulathodu Ubathravam Panjamum Minji Vanthum
Thuttarkal Kittinum Mattillaa Anbaraar Ree
Thunivudan Muttrilum Jeyiththa Visuvaasikal
3.Paaraththaiyum Thamai Nenjkiya Paavaththaiyum Thalli
Patchamurum Yeasu Ratchakar Meethu Tham Paarvaiyai Vaiththu Entrum
Veeramaai Oodiyae Vettri Siranthavar Ree
Veagum Akkiniyin Ukkiram Aviththavar
4.Jeyam Kolluvor Paratheesinil Veettiruppaar Vaada
Jeeva Kreedam Aninthaalugai Seivaar Jeevakani Pusippaar
Viyappuru Puthu Naamam Velludai Pettrumae Ree
Vidivelliyaai Nithyam Vilangi Joliththiduvaar