வாரும் நாம் எல்லாரும் - Vaarum Naam Ellaarum

ஆ வாரும் நாம் எல்லாரும்  - Aa Vaarum Naam Ellaarum


ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,

மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்

மாசிலா நம் யேசு நாதரை

வாழ்த்திப் பாடுவோம். ஆ!


1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்

தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும்


2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே

மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும்


3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் — வாரும்


4.மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த

மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் — வாரும்


5.பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்

பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் — வாரும்



Aa Vaarum Naam Ellaarum Koodi

Magil Kondaaduvom Sattrum

Maasilla Nam Yeasu Naatharai

Vaalththi Paaduvom - Aa


1.Thaaragam Attra Yealaigal Thalaikka Naayanaar Intha

Thaara Niyilae Manudava Thaaram Aayinaar


2.Maa Pathaviyai Elanthu Variyar Aana Naam Angae

Maatchi Ura Veandiyae Avar Thaalchi Aayinaar


3.Gnalamathil Avarkkinai Nanbar Yaarular Paarum

Nam Uyirai Meetkavae Avar Tham Uyir Vittaar


4.Maa Kodiya Saavathin Valimai Neekkiyae Intha

Mandalth Thinintru Uyirth Thavar Vindalam Sentraar


5.Paavi Katkaai Paranidam Parinthu Veandiyae Avar

Patcham Vaiththurum Thozhum Parai Ratchai Seikiraar


வாரும் நாம் எல்லாரும்  - Vaarum Naam Ellaarum


إرسال تعليق (0)
أحدث أقدم