உச்சித மோட்ச பட்டணம் - Utchitha Motcha Pattanam
பல்லவி
உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே;-அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு,
ஓயா இன்பமுண்டு.
சரணங்கள்
1.சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய்,-எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். - உச்சித
2.அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்-அங்கே
இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே. - உச்சித
3.கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறைவோம். - உச்சித
Utchitha Motcha Pattanam Poga
Oodi Nadapomae Angae
Unnatha Yeasu Mannavarundu
Ooyaa Inbamundu
1.Siththira Seeyon Pettrida Sellum
Seanaiyin Koottamathaai Engal
Jeevaninathibar Yeasu Nammagibar
Seeyon Pathi Manuveal
2.Anbinaal Alaippaar Aaruthal Solvaar
Athipathi Yeasaiyar Angae
Inbangalundu Yeasuvin Samugam
Entrentrum Aaruthalae
3.Geethangalodu Yeasuvai Pottri
Gembeeramaai Nadappom Angae
Kilir Ozhiyulla Pattana Raasan
Geethangal Naam Araivom