உனக்கு நிகரானவர் யார் - Unakku Nigaraanavar yaar
பல்லவி
உனக்கு நிகரானவர் யார் ? - இந்த
உலக முழுவதிலுமே .
அனுபல்லவி
தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு
சரணங்கள்
1 .தாய் மகளுக்காக சாவாளோ - கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு
2. கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி - உனக்கு
Unakku Nigaraanavar yaar? Intha
Ulaga Muluvathilumae
Thanakku Thaanae Nigaraam Thaathai Thiru Suthanae
Manukulam Thannai Meetka Maanidanaga Vantha
1.Thaai Magalukkaaga Saavaalo? kooda Pirantha
Thamaiyan Thambikkaai Maaivaano
Neaya Neayarkkaaai Saavaano? Thanathuyirai
Near Virothikkaai Eevaano
Nee Im Mannulagil Neesarkatkaaga Vanthu
Kaayum Manamadavarkkaaga Mariththaai Swami
2.Kanthai Urith Thearinthanai Neethiyin Aadai
Kanakka Uduththu Viththanai
Manthaiyil Searththu Vaiththanai Kadum Vinaigal
Maattri Enthanai Kaaththanai
Kantha Malara Paathanae Kanaga Rathna Mearuvae
Sinthai Uvanthu Vantha Thiyaaga Raasanae Swami
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
In the beginning God created the heaven and the earth.
ஆதியாகமம் : Genesis : 1:1