தோத்திரம் செய்வேனே - Thothiram Seivenae

 தோத்திரம் செய்வேனே - Thothiram Seivenae


பல்லவி


தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்-

தோத்திரம் செய்வேனே


அனுபல்லவி


பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த

பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் - தோத்திரம்


சரணங்கள்


1.அன்னை மரி சுதனை - புல்மீது

அமிழ்துக் கழுதவனை,

முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,

முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை - தோத்திரம்


2.கந்தை பொதிந்தவனை - வானோர்களும்

வந்தடி பணிபவனை,

மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,

வான பரன் என்னும் ஞான குணவானை - தோத்திரம்


3.செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள்

தேடும் குருவானை,

அம்பர மேவிய உம்பர் கணத்தோடு

அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி - தோத்திரம்



Thothiram Seivenae - Ratchakanai

Thothiram Seivenae


Paaththiramakka Immaaththram Karunai Vaitha

Paarththipanai Yutha Koaththiranai Entrum 


1.Annai Mari Suthanae Pul Meethu

Amilthu Kazhuthavanai

Munnanai Meethuttra Sinna Kumaaranai

Munnurai Noorpadi Innila Thuttronai


2.Kanthai Pothinthavanai Vaanorkalum

Vanthadi Panipavanai

Manthaiyar Kaanantha Maatchi Yaliththonai

Vaana Paran Ennum Gnana Kunavaanai


3.Sembon Nuruvaanai Deasikarkal

Theadum Kuruvaanai

Ambara Meaviya Umbar Kanaththodu

Anbu Peara Nintru Paim Pon Malar Thoovi


தோத்திரம் செய்வேனே - Thothiram Seivenae






إرسال تعليق (0)
أحدث أقدم