சரணம் சரணம் சரணம் எனக்குன் - Saranam Saranam Enakkun
பல்லவி
சரணம், சரணம், சரணம் எனக்குன்
தயைபுரியும், என்பரனே.
அனுபல்லவி
மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
மன்னா, ஓ சன்னா! - சரணம்
சரணங்கள்
1.தரணிதனில் வந் தவதரித்த தற்
பரனே, எனக்காக-வலு
மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்
மகிமை, நித்திய பெருமை. - சரணம்
2.சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்
துரோகியான எனக்கு-நீயே
இரவு பகல் என் குறைவு நீக்க, உண்
டேது நலம் என்மீது - சரணம்
3.தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்
தானே வந்து தேட;-உனக்
கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
கற்புதமாம் முடி சூட. - சரணம்
4.எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை
ஏழை அடியேனே-பற்றி
இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
இரங்காய், எனக் கிரங்காய் - சரணம்
Saranam Saranam Saranam Enakkun
Thayai Puriyum Enbaranae
Maranaththin Belan Aliththu Uyirththa En
Mannaa Oosanna Saranam
1.Tharani Thanil Van Thavathariththa Thar
Paranae Enakkaaga Valu
Maranam Adainthum Uyirthealuntha Then
Magimai Niththiya Pearumai
2.Surargal Pottrum Paranae Unakku
Thurogiyaana Enakku Neeyae
Eravu Pagal En Kuraiuv Neekkia Un
Deathu Nalam En Meethu
3.Thappina Aadathar Koththa Adiyeanai
Thaanae Vanthu Theada Unakku
Eppadi Siththam Undaana Dhivvarpanuk
Karputhamaam Mudi Sooda
4.Evvitha Nanmaikum Kaarananae Unai
Yealai Adiyeanai Pattri
Ev Vulagaththil Evvealaiyum Pottravae
Erangaai Enak Kirangaai