பணிந்து நடந்து கொண்டாரே - Paninthu Nadanthu Kondarae

 பணிந்து நடந்து கொண்டாரே - Paninthu Nadanthu Kondarae


பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்

கனிந்து தாய் தந்தையருக்கு

அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு

அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி - பணி


1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌

தயவின் சித்தத்துக் கமைந்த‌

மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று

சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி - பணி


2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனே

விந்தை யுடனே பயின்றார்;

நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்

எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் - பணி


3.பாவம் ஒனறு தவிர நம்மைப் போலப்

பாடுள்ளவராய் நின்றாரே

நாவின் வாக்கினிலே இருந்தாரே புனிதமாய்

பாவீ அவரைக் கண்டு பயிலுவது நன்று - பணி


4.ஆவி பலமடைந்தார்; உலக தேவ‌

அறிவிலும் நிறைவு கொண்டார்;

தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்

பூவில் அவர்க்கு நிகர் புனித ரில்லாதபடி - பணி



Paninthu Nadanthu Kondarae Paran Paalanum

Kaninthu Thaai Thanthaiyarukku

Aninthu Deva Thayavai Panintha Manathinodu

Avarkku Thaninthu Ethir Munainthu Sollathapadi


1.Thanthai Thaai Thanai Mathithu Avarudaya

Thayavin Siththathuku Kamaintha

Maintharkal Ulaginil Vaalnthu Iruppaarentru

Sinthai Magilnthu Paran Seppiya Mozhippadi


2.Thanthai Kugantha Vealaiyil Avarudanae

Vinthai Yudanae Payintaar

Ninthai Yithuventrenni Sinthai Kalangidaamal

Entha Vithamum Narar Thannai Pinpattriyega


3.Paavam Ontru Thavira Nammai Pola 

Paadullavaraai Nintraarae

Naavin Vaakkinilae Irunthaarae Punithamaai

Paavi Avarai Kandu Payiluvathu Nantru


4.Aavi Balamadainthaar Ulaga Deva

Arivilum Niraiuv Kondaar

Deva Kirubaiyilum Thirumarai Muraiyilum

Poovil Avarkku Nigar Punithar Illathapadi 


பணிந்து நடந்து கொண்டாரே - Paninthu Nadanthu Kondarae


إرسال تعليق (0)
أحدث أقدم