கர்த்தரைப் போற்றியே - Karththarai Pottriyae

 கர்த்தரைப் போற்றியே - Karththarai Pottriyae


1.கர்த்தரைப் போற்றியே வாழ்த்துது

கனிந்துமே என் ஆத்துமா

களிக்குதே என் ஆவி கருணை

கூர்ந்தனர் பரமாத்துமா.


2.இன்று தன்னடிமையின் தாழ்மையை

இறையவர் கண்ணோக்கினார்

என்றென்றும் எல்லோரும் புகழ

என்னைத் தன்மய மாக்கினார்


3.பரிசுத்த நாமம் மகிமையாய்

பகுத்தாரனைத்தும் நல்லது

பயந்தவர்களுக் கவரிரக்கம்

பரம்பரைகளுக்குள்ளது.


4.ஆண்டவர் தம் புயத்தை உயர்த்தி

பராக்கிரமம் செய்திட்டார்

அகந்தையுள்ளோரைச் சிதறடித்தார்

அன்பர்க்கருள் மாரி பெய்தார்.


5.பசித்தோரை ஆதரித்தவர்களைப்

பரிந்து நன்மையால் நிரப்பினார்

பஞ்சையாய்த் தனவான்களை யவர்

பாரில் வெறுமையாய் அனுப்பினார்.


6.பிதாகுமாரன் சுத்த ஆவிக்கும்

மகிமை உண்டாவதாக

சதாகாலமும் என்றென்றைக்கும்

மகிமை உண்டாவதாக ஆமென்.



1.Karththarai Pottriyae Vaalththu

Kaninthumae En Aathumaa

Kalikkuthae En Aavi Karunai

Koornthaar Paramaathuma


2.Intru Thannadimaiyin Thaazhmaiyai

Iraiyavar Kannorkkinaar

Entrentum Ellorum Pugala

Ennai Thanmaya Maakkinaar


3.Parisuththa Naamam Magimaiyaai

Paguththaranaiththum Nallathu

Bayanthavarkalukku Kavarirakkam

Paramparaikullathu


4.Aandavar Tham Puyaththai Uyarththi

Parakkiramam Seithittaar

Aganthaiyullorai Sitharadiththaar

Anbarkkukarul Maari Peithaar


5.Pasiththorai Aathariththavarkalai

Parinthu Nanmaiyaal Nirappinaar 

Panjau Yaai Thanavaankalai Yavar

Paaril Vearumaiyaai Anuppinaar


6.Pithaa Kumaaran Suththa Aavikkum

Magimai Undavathaka

Sathaa Kaalamum Entrentraikum

Magimai Undavathaka Amen.


கர்த்தரைப் போற்றியே - Karththarai Pottriyae


إرسال تعليق (0)
أحدث أقدم