இந்த அருள் காலத்தில் - Intha Arul Kaalathil
1. இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்.
2. தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே.
3. மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே.
4. உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்.
5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்
விட்டதாலும், தேவரீர்
எங்கள் மேல் இரங்குவீர்.
6. நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும், இயேசுவே.
1.Intha Arul Kaalathil
Kartharae Um Paathathil
Panivom Mulanthaalil
2.Theerppu Naal Varumunnae
Engal Paavam Unarnthae
Kanneer Sintha Yeavumae
3.Motcha Vaasal Yeasuvae
Pootumun Em Pearilae
Thooya Aavi Ootrumae
4.Unthan Raththa Vearvaiyaal
Seitha Maa Mantraadinaal
Saaga Sammathiththaal
5.Seeyon Nagarkkaai Kanneer
Vittathaalum Devareer
Engal Meal Eranguveer
6.Naangal Ummai Kaanvae
Arul Kaalam Pomunnae
Thanjam Eeyum Yeasuvae