வந்தனம் வந்தனமே! தேவ - Vanthanam Vanthanamae Deva

 வந்தனம் வந்தனமே! தேவ - Vanthanam Vanthanamae Deva


பல்லவி


வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது

வரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம்


சரணங்கள்


1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்

தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே


2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்

சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே!


3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்ய

சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே.


4. உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் – பார்த்தல்

ஒப்பே தருங்காவலே உன்னருளுக்குத் தரும் புகழ் துதி, துதியே


5. மாறாப் பூரணனே எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன்

வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே


Vanthanam Vanthanamae Deva Thunthumi Kondithamae - ithu

Varaiyil Emaiyae Valamaai kaaththa Enthuraiyae Migaththanthanam


1.Santhatha santhathame Engal Thagu Nantri kadaiyaalamae - Naangal

Thaazhnthu veelnthu Saranaj seikaiyil Thayai koor surar pathiyae


2. Saruva viyaabakamum Emai saarntha tharkaaththathuvae - Nangal

Saami Panivaai Neami thuthi Pugal thanthanamae Nithamae


3. Saruva vallapamathum Emai Thaanginathum Pearithae - Sathya

saruveshuranae Kirubakaranae Un saruvaththugunthuthiyae 


4. Unthan saruva Gnanamum Engalukullanthiriyum Yaavaiyum- Paarththaal

Oppae Tharngavalae Unnarulukkuae Tharum pugal thuthu, Thuthiyae


5.Maaraa poorananae Ella varudangalilum Eththanai - untran

Vakki tharaatharuli Pozhinthittta Vallavikkunth thuthiyae 


வந்தனம் வந்தனமே! தேவ - Vanthanam Vanthanamae Deva


إرسال تعليق (0)
أحدث أقدم