சூரியன் மறைந்து அந்தகாரம் - Sooriyan Marainthu Anthakaaram

 சூரியன் மறைந்து அந்தகாரம் - Sooriyan Marainthu Anthakaaram


1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுது

தூயா கிருபை கூர்ந்து காருமையா


2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே

சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே

சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன்


3.பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகா

பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையா

கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய்


4.ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்

பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்

நேயா நின் நல்தூதர் காவல் தா


5.ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்

அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்

ஐயனே உன் பொன்னடி சரணம்



1.Sooriyan Marainthu Anthakaaram Soozhnthu

Soorntha En Degamum Ayarnthumae Ilaipparrapoguthu

Thooya Kirubai Koornthu Kaarumaiyaa


2.Pagal Muzhuvathum Patchamaai Ennai Paathukaaththeerae

Sagala Theemaiyumagala Vaiththarul Nalamunthantheerae

Swami Untran Paatham Panikirean


3.Paathagam Miga Purinthean Parama Naayaga

Paavi Naanintha Naalilum Pala Theevinai Seitheanaiyaa

kobamintri Enpavam Poruththiduvaai


4.Raavil Varum Mosamontrum Ennai Searamal

Peayin Sarppanai Theeya Sorppanam Manathil Nearamal

Neaya Nin Nal Thoothar Kaavalthaa


5.Aaththumam Sareeram Enakkaana Yaavaiyum

Appanun Kaiyil Oppuviththu Naan Amarnthu Thoonguvean

Aiyyanae Un Ponnadi Saranam


சூரியன் மறைந்து அந்தகாரம் - Sooriyan Marainthu Anthakaaram


إرسال تعليق (0)
أحدث أقدم