பாடித் துதி மனமே பரனை - Paadi Thuthi Manamae Paranai
பல்லவி
பாடித் துதி மனமே
பரனைக் கொன் – டாடித் துதி தினமே
அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி
சரணங்கள்
1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி
2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புற சாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி
3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி
Paadi Thuthi Manamae
Paranai kondadi Thuthi Manamae
Needitha Kaalamathaaka Paran emai
Neasitha Patchaththai vaasithu vaasithu- Paadi
1.Theerkatharisikalai kondu munnura
seppina deva paran intha kaalaththil
Maarkamathaka kumaaranai kondu
Vilakkina Anbai Vilanthu Thiyanithu- Paadi
2. Sontha Janamaga Yuthar irunthida
Tholaiyil Kidantha Pura Jaathiyaam Emao
Manthaiyil Searthu paraaparan thammudai
Maintharkalakkina santhoshaththukaaka- Paadi
3.Eththanai Theerkar Anega Apposthalar
Eththanai Pothakarkal Raththa Saatchikal
Eththanai Vendumo Aththanaiyum Thanthingu
Iththanaiyaai Kirubai Vaitha Nam karththanai - Paadi