எனது கர்த்தரின் ராஜரீக நாள் - Enathu Kartharin Raajareega Naal
பல்லவி
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ ?
அனுபல்லவி
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே - எனது
சரணங்கள்
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே - எனது
2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே - எனது
3. ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து சூழுவார்
நீதியாய்த் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார் - எனது
4.எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே - எனது
5. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே - எனது
Enathu Kartharin Raajareega Naal
Eppo Varugumo
yeangum En Kali Neenga Magilchi
Eppo Pearugumo
Manithasuthanin Adaiyaalam Vinnil Kaanum Entraarae
Vallamaiyodu Magimaiyaai Thontri Varuvean Entraarae
1.Deva Thootharin Kadaisi Ekkaalam Thoni Mulangavae
Jegaththil Yeasuvai Pattri Mariththor Uyirththelumbavae
Jeevanullorum Avarudan Maru Roobamagave
Jegaththil Baktharkal Karththaridaththu Kelunthu Pogavae
2.Thoothar Ekkaala Thoniyil Ennidam Searppean Entraarae
Sothanai Kaalanthanil Thappa Unnai Kaappean Entraarae
Paathaga Manujaathi Veadhanai Adaiyum Entraarae
Paava Manusan Thontri Naasamaai Povaan Entraarae
3.Jaathikatkku Kodiyaai Eesaayin Vearentruvaar
Sagalarum Avar Kodiyin Keel Vanthu Paninthu Sooluvaar
Neethiyaai Thaanae Measiya Engum Aalugai Seivaar
Niththam Pirapukkalaum Niyaamaai Thuraithanam seivaar
4.Yearusale milirunthu Jeeva Nathikal Oodumae
Yealaigal Mana Magilnthu Karththarai Yeanthi Paadumae
Varushamayiram Alavum Boomiyil Balankal Needumae
Vaanaraatchiya Seanaikal Yaavum Vanthu Koodumae
5.Sanjalangalum Thavippukalum Yaavum Oodi Pogumae
Santhosaththodu Magilchiyum Vanthu Saarnthu Pidikkumae
Nenja Magilnthu Neethimankalain Vaai Thuthikkumae
Niththiya Jeevanai Peara Entran Manam Thudikkumae