அனுக்ரக வார்த்தையோடே - Anugraha Vaarthaiyodae
1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போ-து
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.
2. நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம், புகழ், மகிமை, - கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
1.Anugraha Vaarthaiyodae - Ippothu
Adiyaarai Anuppumaiyaa
Manamathil Thayavurum Magaththuvaparanae
Vanthanam Umakkaamen
2.Nin Thiru Naamamathil Keatta
Nirmalamaam Mozhigal
Santhatham Emathagam Miga Palanaliththida
Saami Ninnarul Purivaai
3.Thoththiram Pugal Magimai Keerththi
Thuthi Ganam Thinam Umakkae
Paaththiramae Athi Sobitha Paranae
Paathasaran Amen