என்ன காணிக்கை படைப்பேன் - Enna Kaanikkai Padaipean

 என்ன காணிக்கை படைப்பேன் - Enna Kaanikkai Padaipean


பல்லவி


என்ன காணிக்கை படைப்பேன்? - நான்

இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில்


அனுபல்லவி


பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை

என்னுயிரைவிட யாதுண்டு வேறே


1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் - இனி

எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்

தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்

தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் - என்ன


2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய - திவ்ய

ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல

சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல

தேவா துணை புரி சாட்சி நான் சொல்ல - என்ன


3. என்னில் தங்கி அரசாள்வீர் - எந்தன்

இருதயத்தில் மெய்ச் சந்தோஷத்தைத் தருவீர்

மன்னா வாசலைத் திறந்தேன் நீர் வாரீர்

மகத்துவமாக நீர் பிரகாச மீவீர் - என்ன



Enna Kaanikkai Padaipean? Naan

Immai Marumai Paran Thiru Naamaththil


Panninean Parisuththa Paliyaagavennai

Ennuiraivida Yaathundu Vearae


1.Ellanj Samoolamaai Thanthean Ini

Enakku Neerae Pothumentruumai Kondean

Thallaathu Kaaththarul Thamiyean Naan Vanthean

Thanjamentrummai Naan Saarnthu Paninthean


2.Alaiththitteer Oozhiyam Seiya Divya

Aaviyin Pattayam Aninthu Naan Sella

Siluvaiyai Eduththentrum  Thooya Pinsella

Devaa Thunai Puri Saatchi Naan Solla 


3.Ennil Thangi Arasaalveer Enthan

Irudhayaththil Mei santhosaththai Tharuveer

Mannaa Vaasalai Thiranthran Neer Vaareer

Magththuvamaaga Neer Pirakaasa Meeveer 

என்ன காணிக்கை படைப்பேன் - Enna Kaanikkai Padaipean


إرسال تعليق (0)
أحدث أقدم