ஐயா உமது சித்தம் - Aiyya Umathu Siththam

 ஐயா உமது சித்தம் - Aiyya Umathu Siththam


பல்லவி


ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்,


அனுபல்லவி


மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். - ஐயா


சரணங்கள்


1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழி யொப்பி

கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். - ஐயா


2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,

யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். - ஐயா


3. வசை, இசை,பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,

பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் - ஐயா


4. என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்,

பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன். - ஐயா


5. குயவன் கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,

நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! - ஐயா



Aiyya Umathu Siththam Aagidavae Veanum


Meiyaai Enathu Siththam Vegumosamae Kaanum


1.Aadugal Vazhi Thappi Avanavan Vazhi yoppi

Keadadainthoor Paavaththai Kirsithumeal Sumaththineer 


2.Jeevano Maranamo Selvamo Varumaiyo

Yaaviyealanai Niruththa Devareer Ninaikinum 


3.Vasai Isai Pagai Neasam Vaazhvuyar Vathi Moosam

Pasi Niruvaanam Naasam Paadu Noyadaikinum


4.Ennistam Vaayaathathaal Eththanai Thuyar Kondean

Ponnadai Keeladangi Pugalum Entru Vaazhvean 


5.Kuyavan Kai Kalimannaai Guruvae Umakkamaivean

Nayamithu Ventrirantha Gnanamulla pithavae 

ஐயா உமது சித்தம் - Aiyya Umathu Siththam




إرسال تعليق (0)
أحدث أقدم