இயேசு முற்றாய் இரட்சியும் - Yesu Muttrai Ratchiyum
1. இயேசு முற்றாய் இரட்சியும்
வீண் என் பிரயத்தனங்கள்;
போதா தென் சுயரட்சை
சுத்தி செய்யும் முற்றும்
பல்லவி
முற்றுமாய் முற்றுமாய்
என்னை சுத்தம் செய்யும்;
மகிமை பாதையில் நான்
செல்ல சுத்தி செய்யும்
2. சோதனை பாவம் போக்கி
கர்வம் சுயம் நீக்கி;
முற்றாய் என்னை ரட்சித்து
புதுப்பியும் என்றும் - முற்றுமாய்
3. இன்ப துன்பத்தி னூடே
இயேசுவோடு பேசி;
என் நேசர் கரம் பற்றி
என்றும் நடந்திட - முற்றுமாய்
4. எந்த னுள்ளம் எண்ணமும்
மாமிசம் ஆவியும்;
இரட்சியும் அங்கமெல்லாம்
உம் மா! வல்லமையால் - முற்றுமாய்
1.Yesu Muttrai Ratchiyum
Veen En Pirayaththanangal
Potha Then Suyaratchai
Suththi Seiyum Muttrum
Muttrumaai Muttrumaai
Ennai Suththam Seiyum
Magimai paathaiyil Naan
Sella Suththi Seiyum
2.Sothanai Paavam Pokki
Karvam Suyam Neekki
Muttraai Ennai Ratchiththu
Puthupiyum Entrum
3.Inba Thunbaththinudaw
Yesuvodu Peasi
En Neasar Karam Pattri
Entrum Nadanthida
4.Enthan Ullam Ennamum
Maamisa Aaviyum
Ratchiyum Angamellam
Um Maa Vallamaiyaal