நடத்துவார் ஆ இன்பெண்ணம் - Nadaththuvaar Ah Inbennam
1. நடத்துவார் ஆ! இன்பெண்ணம்!
மா ஆறுதல் சாரும் வண்ணம்,
நான் எவ்விடத்திருக்கினும்,
தேவனின் கையே நடத்தும்
பல்லவி
நடத்துவார்! நடத்துவார்!
தம் கையாலே நடத்துவார்!
அவரை நேராய் பின்செல்வேன்;
தம் கையாலே நடத்துவார்!
2. ஓர் வேளை இருள் பாதையில்,
ஓர் வேளை ஏதேன் பூங்காவில்,
அலை கடல் அமைவிலும்
அவர் நேச கை நடத்தும்! - நடத்துவார்
3. கர்த்தா! நான் உம் கை பிடிப்பேன்,
திருப்தியால் குறை பேசேன்!
எந்த நிலையும் பூரணம்;
நீரே எனக்குத் தாரணம்! - நடத்துவார்
4. இங்கென் வேலை முடிந்தபின்,
துங்கனால் வெற்றி பெற்ற பின்
பங்கம் சாவிலு மஞ்சிடேன்,
பொங்கு யோர்தான் தாண்டச் செய்வார்! - நடத்துவார்
1.Nadaththuvaar Ah Inbennam
Maa Aaruthal Saarum Vannam
Naan Evvidaththirukkinum
Devanin Kaiyae Nadaththum
Nadaththuvaar Nadaththuvaar
Tham Kaiyaale Nadaththuvaar
Avarai Nearaai Pinselvean
Tham Kaiyaalae Nadaththuvaar
2.Oor Vealai Irul Paathaiyil
Oor Vealai Yeathean Poongaavil
Alai Kadal Amaivilum
Avar Neasa Kai Nadaththum
3.Karththaa Naan Um Kai Pidippean
Thirupthiyaal Kurai Peasaen
Entha Nilaiyum Pooranam
Neearae Enakku Thaaranam
4.Engen Vealai Mudinthapin
Thunganaal Vettri Pettra pin
Pangam Saavilu Manjidean
Pongu Yoorthaan Thaanda Seivaar