மீட்பர் சேனையில் போர்செய்ய - Meetpar Seanaiyil Poorseiya
1. மீட்பர் சேனையில் போர்செய்ய நாம் துணிந்தோம்,
பாவத்தை என்றும் எதிர்ப்போம்;
பேயை ஓட்டி பாவிகளை இரட்சித்து, நாம்
இயேசுவினால் ஜெயம் பெறுவோம்
பல்லவி
நான் முன்செல்வேன் மீட்பரன்பால்
துன்பத்திற்குப் பயப்படேன்
மீட்பர் சென்ற அப்பாதையில்
சென்று என்றும் யுத்தஞ் செய்வேன்
2. பாவிகளை யல்ல பாவத்தையழிக்க
ஏழையோ நீசனோ நேசிப்போம்;
இரட்சிப்போம் பாதையில் எல்லாரும் நடக்க
மீட்பரண்டை கூவி அழைப்போம் - நான்
3. பாவத்தின் வேதனையை நீக்கி விடவே
நேச இயேசு ஜீவன் விட்டார்;
எழுந்தார் திரும்ப இரட்சிப்பு நாம் பெற
மீட்பின் மார்க்கந்தனைத் திறந்தார் - நான்
1.Meetpar Seanaiyil Poorseiya Naam Thuninthom
Paavaththai Entrum Ethirppom
Peayai Ootti Paavikalai Ratchiththu Naam
Yeasuvinaal Jeyam Pearuvom
Naan Mun selvean Meetparanbaal
Thunpaththirkku Payappaden
Meetpar Sentra Appaathaiyil
Sentru Entrum Yuththam Seivean
2.Paavikalai Yalla Paavaththai Azhikka
Yealaiyo Neesano Neasippom
Ratchippom Paathaiyil Ellarum Nadakka
Meetparandai Koovi Alaippom
3.Paavaththin Vedhanaiyao Neekki Vidavae
Neasa Yeasu Jeevan Vittaar
Ezhunthaar Thirumba Ratchippu Naam Peara
Meetppin Maarkkanthanai Thiranthaar