மருந்து கண்டேனே -Marunthu Kandenae
பல்லவி
மருந்து கண்டேனே - நானொரு
மருந்து கண்டேனே
சரணங்கள்
1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து
வளர் பெத்லகேமில் வந்த மருந்து
திருச் செயல்களைச் செய்த மருந்து,
தீன தயாபரனாகிய மருந்து! - மருந்து
2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து
அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து
பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து
பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! - மருந்து
3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து,
தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து
மூர்க்கர் கையிலகப்பட்ட மருந்து,
மூவரி லொருவரான மருந்து! - மருந்து
4. பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!
பூரண விடுதலை தந்த மருந்து
கூசாமல் அற்புதஞ் செய்த மருந்து
குருவாகப் புவியிலுதித்த மருந்து! - மருந்து
Marunthu Kandenae-Nanoru
Marunthu Kandenae
1.Varuththum Pinikalai Vaattum Marunthu
Valar Bethlahemil Vantha Marunthu
Thiru seyalkalai Seitha Marunthu
Theena Thayaparanakiya Marunthu- Marunthu
2.Aauvkal kottilil Pirantha Marunthu
Anbaka Meippar Aarathitha Marunthu
Paavam Pokka Raththam sinthina Marunthu
Parisuththaraana Meigana Marunthu -Marunthu
3.Theerka Tharisikal Uraitha Marunthu
Theevinai Yaavaiyum Theerkkum Marunthu
Moorkkar kayilakapatta Marunthu
Moovari Loruvaraana Marunthu- Marunthu
4.Pisasin Thalaiyai Nasukkum Marunthu
Poorana Viduthalai Thantha Marunthu
Koosaamal Aruputham seitha Marunthu
Guruvaga puviyiluthitha Marunthu - Marunthu