கருணாகரா காருமென்பரா - Karunaagara Kaarumenparaa
பல்லவி
கருணாகரா - காருமென்பரா
அருளளிப்பாயே அண்டினேனுன் தாளே
அனுபல்லவி
வருந்தும் பாவி வந் திளைப்பாறி
விருந்துண் பீரென்று விளம்பினீ ரன்று
சரணங்கள்
1. சந்ததமும் நானே சிந்தனை செய்தேனே
வந்தருள் செந்தேனே! மைந்தன் நம்பினேனே
கந்த மலரா தந்தே னென்னைப் பூராய்
எந்தை இயேசு நாதா! ஏற்றிடுவீர் வேதா - கரு
2. நன்னெறி புகுத்தி நவையதை நீக்கி
இன்னலை யகற்றி இகலதைப் போக்கி
உன் னழகைத் தந்து ஒருங்காய்க் காத்து
உன்னதத் துய்யச் செய் மன்னா இயேசு நாதா! - கரு
3. கூறும் எங்கள் மறைக் குகந்த நல்லிறை
தேறு மவர் ஜெபத் தியானமே என் துறை;
வேறு ஒன்றுமே வேண்டிலேனே மெய்!
பேறு தந்தனையே பேரொளிப் ப்ரகாசா! - கரு
Karunaagara Kaarumenparaa
Arullippaayae Andineanunan Thaazhe
Varunthum Paavi Vanthilaipaari
Virunthun Peerentru Vilambinee rantru
1.Sanththamum Naanae Sinthanai Seithaenae
Vantharul Sentheanae Mainthan Nambineanae
Kantha Malaraa Thanthaen Ennai Pooraai
Enthai Yesu Naatha Yeattriduveer Veadha
2.Nanneari Puguththi Navaiyathai Neekki
Innalai Yahattri Egalathai Pookki
Unnalagai Thanthu Orungkaai Kaaththu
Unnatha Thuiya Sei Mannaa Yesu Naatha
3.Koorum Engal MaraiKugantha Nallirai
Thearu Mavar Jeba Thiyanamae En Thurai
Vearu Ontrumae Veandilaenae Mei
Pearu Thanthanaiyae Pearoli prakaasha