கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் - Karththaril Magilnthiduveer
1. கர்த்தரில் மகிழ்ந்திடுவீர்
சுத்த இதயமுள்ளோரே;
நீக்கிடுவீர் திகிலை
கர்த்தரில் என்றும் மகிழ்வீர்!
பல்லவி
மகிழ்வீர் மகிழ்வீர்
கர்த்தரில் என்றும் மகிழ்வீர்
2. நீதிக்காய் போராடும் போரிலே
பாதகன் சாத்தான் எதிர்த்தாலும்;
தேவனின் சேனை வென்றிடும்,
ஆதலால் திடனாய் நின்றிடும்
3. பகலில் இருள் சூழ்ந்திடினும்,
அவர் வெளிச்சம் வீசிடுவார்;
ஆவியில் கலங்கிட வேண்டாம்
தேவனை முற்றிலும் நம்பிடும்
4. கர்த்தரில் மகிழ்ந்திடுவீர்
கீதம் பாடியே போற்றிடுவீர்;
எக்காள சத்தத்துடனே
அல்லேலூயா பாடிடுமேன்
1.Karththaril Magilnthiduveer
Suththa Idhayamullorae
Neekkiduveer thigilai
Kaththaril Entrum Magilveer
Magilveer Magilveer
Kaththaril Entrum Magilveer
2.Neethikkaai Poraadum Porilae
Paathagan Saaththaan Ethirththaalum
Devanin Seanai Ventridum
Aathalaal Thidanaai Nintridum
3.Pagalil Irul Soozhnthidinum
Avar Velicham Veesiduvaar
Aaviyil Kalangida Vendaam
Devanai Muttrilum Nambidum
4.Karththtaril Magilnthiduveer
Geetham Paadiyae Pottriduveer
Ekkaala Saththathudanae
Alleluyaa Paadidumean