இன்பக் கானானுக்குள் - Inba Kaanaanukkul

 இன்பக் கானானுக்குள் - Inba Kaanaanukkul


1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல

இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்


2. பரம சுகங்களின் இனிய ரசம்

பரம ராஜனோடு பானம் செய்வேன்


3. பரம பிதா எந்தன் கண்ணின்று

அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்


4. சத்துரு சேனைகள் அங்கேயில்லை

இயேசுவின் புத்திரர் மாத்திரமே


5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி

சிறப்புடனிலங்கிடும் தேசமது


6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே

மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே!


7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே

சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே


8. பரிசுத்த ஆவியின் பளிங்கு நதி

பள பளென் றொழுகிடும் தேசமது


9. ஜீவ விருட்ச மங் காற்றருகில்

மாதந்தோறும் புதுக் கனி தருமே


10. நவரத்ன நிர்மிதப் பட்டணத்தில்

இராப் பகல் சூரியன் இயேசுதாமே



1.Inba Kaanaanukkul Yealai Sella

Yeasuvin Maarbil Naan Aananththippean


2.Parama Sugankalin Iniya Rasam

Parama Raajanodu Paanam Seivean


3.Parama Pithaa Enthan kannintru

Alugaiyin Kanneerai Thudaiththiduvaar


4.Saththuru Seanaigal Angaeyillai

Yeasuvin Puththirar Maaththiramae


5.Devaattu Kuttiyin Thiru Manaivi

Sirappudanilangidum Deasamathu


6.Kearoobin Searaabeengal Paadidavae

Moopparum Saastaangam Panikiraarae


7.Sollukkum Ninaiyvkkum Ettidaathae

Sorkkaloga Naattukkoor Inaiyillaiyae 


இன்பக் கானானுக்குள் - Inba Kaanaanukkul


إرسال تعليق (0)
أحدث أقدم