தேவன் தம் வீரரை - Devan Tham Veerarai
1. தேவன் தம் வீரரைக் காப்பதால்
நாம் எப்போதும் முன் செல்வோம்;
பாதாள சேனை எதிர்த்தால்
அவர் பெலத்தால் வெல்வோம்;
தோற்கடிக்க முயன்றாலும்
சேனை பின்வாங்காமற் செல்லும்
இரட்சண்ய ஜெயங் கிடைக்கும்
பின் வாங்கோம், ஒரு போதும்!
பல்லவி
ஒரு போதும் போரில் நாங்கள் பின் வாங்கோம்!
பின் வாங்கோம் பின் வாங்கோம்!
ஒரு போதும் போரில் நாங்கள் பின் வாங்கோம்!
இயேசு ராஜன் பலத்தால் ஜெயங்கொள்ளுவோம்!
2. வெல்லும் மீட்பரைப் பின் செல்லுவோம்
அவர் முன் பேய், பூதங்கள் ஓடும்!
அவர் பட்டயத்தால் நாம் வெல்வோம்!
துன்பமோ, சாவோ பயப்படோம்;
பரிசுத்தம், நம்பிக்கை,
மோட்சம் இம் மூன்றினின்றும்
யார் பிரிக்கக்கூடும் எம்மை?
மீட்பரால் வெல்வோம் என்றும்! - ஒரு போதும்
3. எத்தேசத்தாருக்கும் இரட்சிப்பை
எங்கும் சென்று கூறுவோம்;
பூரண மீட்பின் பலத்தை
நடக்கையால் காட்டுவோம்!
பேயின் அரசை அழிப்போம்!
சிலுவைக் கொடி ஊன்றுவோம்!
எப்போதும் ஜெயசீலராய்
ஒரு போதும் பின்வாங்கோம்! - ஒரு போதும்
1.Devan Tham Veerarai Kaappathaal
Naam Eppothum Mun Selvom
Paathaala Seanai Ethirththaal
Avar Belaththaal Velvom
Thoorkadikka Muyantraalum
Seanai Pin Vaankaamar Sellum
Ratchanya Jeyam Kidaikkum
Pin Vaankom Oru Pothum
Oru Poothum Pooril Naangal Pin Vaankom
Pin Vaankom Pin Vaankom
Oru Poothum Pooril Naangal Pin Vaankom
Yeasu Raajan Balaththaal Jeyam kollluvom
2.Vellum Meetpparai Pin Selluvom
Avar Mun Peai Boothangal Oodum
Avar Pattayaththaal Naam Velluvom
Thunbamo Saavo Payappadom
Parisuththam Nambikkai
Mootcham Em Moontrinintrum
Yaar Pirikka Koodum Emmai
Meetpparaal Velvom Entrum
3.Eth Deasaththaarukkum Ratchippai
Engum Sentru Kooduvom
Poorana Meetpin Balaththai
Nadakkaiyaal Kaattuvom
Peayin Arasai Azhippom
Siluvai Kodi Oontruvom
Eppothum Jeya Seelaraai
Oru Poothum Pin vaankom