அல்லேலூயா என்று பாடுவோம் - Allealuyae Entru Paaduvom

 அல்லேலூயா என்று பாடுவோம் - Allealuyae Entru Paaduvom



பல்லவி


அல்லேலூயா என்று பாடுவோம் - இரட்சகர் செய்த

நல்ல மாறுதலைக் கூறுவோம்


அனுபல்லவி


அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி

உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம்


சரணங்கள்


1. பாவியாயலைந்து திரிந்தோம் - அதிசயமாய்

இயேசு இரட்சகரையுங் கண்டோம்;

பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து

தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் - அல்


2. தேவ அன்பின் வெள்ளப்பெருக்கம் - எப்படிப்பட்ட

பாவ வலையையும் அறுக்கும்

ஆவலோடு தேடி வந்தால் போருடை உனக்குடுத்தி

தேவ பட்டயமும் தந்து தீரனாக்குவார் அப்போது - அல்


3. மீட்பர் அன்பால் முன்னே செல்லுவோம், மலைகள் போன்ற

துன்பத்திலும் பயப்பட்டோடோம்

இரட்சிப்பின் நற்பாதையிலே பாவிகளைக் கொண்டு வந்து

சிட்சையடையாமலே நாம் மோட்சபாதைக் கொண்டு சேர்ப்போம் - அல்


Allealuyae Entru Paaduvom -Ratchakar Seitha

Nalla Maaruthalai kooruvom


Angum Engum Engumaaga Ratchippai Evarkkum Solli

Unmaiyaai Naam Poor Purinthu Ookathudanae Vealai Seivom


1.Paaviyaayalaninthu Thirinthom - Athisayamaai

Yesu Ratchakaraiyum Kandom

Paava Jeeviyam Thavirthu Loga Aasaiyum Vearuthu

Thaavi Varuvorai Suththi Seiyum Oottrai Kandukondom 


2.Deva Anbin Vellaperukkam- Eppadipatta

Paava Valaiyaiyum Arukkum

Aavalodu Theadi Vanthaal Porudai Unakuduththi

Deva Pattayamum Thanthu Theeranaakkuvaar Appothu


3.Meetpar Anbaal Munnae Selluvom Malaikal pontra

Thunbaththilum Bayapattom

Ratchippin Narpaathaiyilae Paavikalai Kondu Vanthu

Sitchaiyadaiyaamalae Naam Motcha Paathai Kondu Searppom

அல்லேலூயா என்று பாடுவோம் - Allealuyae Entru Paaduvom


إرسال تعليق (0)
أحدث أقدم