ஆள் இல்லை ஆள் இல்லை - Aal illai Aal Illai

 ஆள் இல்லை ஆள் இல்லை - Aal illai Aal Illai


ஆள் இல்லை ஆள் இல்லை

அழுது ஜெபிக்க ஆள் இல்லை 

செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்

கண்ணீர் சிந்த ஆள் இல்லை 


சின்னஞ்  சிறுவரை  சித்ரவதை செய்து 

வதைக்கும்  கூட்டம்  உண்டு 

கதறி  துடிக்கும்  பாலகர்க்காக 

கண்ணீர்  வடிக்க  ஆள்  இல்லை 


குடித்து வெறித்து அடித்து உதைக்கும் 

கொடூர கூட்டம் உண்டு 

அழுதே வாழ்வை கழிப்போர்க்காக 

அழுது புலம்ப ஆள் இல்லை


திருடப்பட்டோர் விற்கப்பட்டோர் 

தினமும் புலம்புகின்றார் 

சிறை வாழ்வாலே சிதைந்தோர் மீள 

அறையில் ஜெபிக்க ஆள் இல்லை


கொடுமை புரிவோர் தீமை செய்வோர் 

மனம்திரும்பவில்லை 

கண்ணீர் அவரை மாற்றும் என்று 

அறிந்தும் ஜெபிக்க ஆள் இல்லை


தேவன் வருவார் கணக்கு கேட்பார் 

எப்படி ஜெபித்தாய் என்பார் 

என்ன சொல்ல எப்படி சொல்ல 

தலை குனிவோர் ஏராளம் 


Aal illai Aal Illai

Aludhu jebika aal illai

Seneer sindhi Nesar jebithaar

Kaneer sindha aal illai


1.Chinanj chiruvarai chitravathai seithu

Vathaikum kootam undu

Kathari thudikum palakarkaga

Kaneer vadika aal illai


2.Kudithu verithu adithu udhaikum

Kodura kootam undu

Aludhey vazhvai kaliporkaga

Aludhu pulamba aal illai


3.Thirudapattor virkapattor

Thinamum pulambuginrar

Sirai vazhvaley sithainthoor meela

Araiyil jebika aal illai


4.Kodumai purivoor theemai seivoor

Manamthirumbavillai

Kanneer avarai mattrum endru

Arindhum jebika aal illai


5.Dhevan varuvaar kanaku ketpaar

Eppadi jebithai enbaar

Enna solla eppadi solla

Thalai guneevor yerallam




إرسال تعليق (0)
أحدث أقدم