ராச ராச பிதா மைந்த தேசு - Raasa Raasa pithaa maintha
ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2)
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச
1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே (2)
நிறைவான காந்தனே இறையான சாந்தனே! மறை – ராச
2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா (2) சுதனாமனாமனா சித – ராச
3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா சிரி – ராச
4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே (2)
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச
Raasa raasa pithaa maintha thaekalaavusathaa nantha
yaesu naayakanaar sontha maesiyaa nanthanae (2)
Jegatheesu raesuran suka naesa meesuran maka – raasa
1. Maasilaa manniyae! manthra aasilaa anniyae, sunthara
naesamae panniyae, thanthira mosamae thanniyae (2)
niraivaana kaanthanae, iraiyaana saanthanae! marai – raasa
2. Aathiyantha millaan antha maathinunthiyilae, muntha
vaetha panthanamaay vantha paatham vanthanamae,
patha aamanaamanaa (2) suthanaamanaamanaa sitha – raasa
3.Meanmaiya Sananae Nanmai Meauvposananae Thonmai
Paanmai Vasananae Punmai Paava Mosananae
Kirubai Karaa Naraa Saruvesuraa paraa siri -raasa
4. Veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar
kaedu moodavumae, vinthaiyodu paadavumae (2)
naravaeda maevinaan, suraraadu kovinaan, para – raasa