இந்நேரம் வந்ததேதய்யா - Innearam Vanthathethaiyaa

 இந்நேரம் வந்ததேதய்யா - Innearam Vanthathethaiyaa


பல்லவி


இந்நேரம் வந்ததேதய்யா?-என்னய்யா சுவாமி 

இந்நேரம் வந்ததேதையா?


சரணங்கள்


1 மந்தையைத் தேவரீர் தேடச்-சம்மனசோர்கள் 

மங்கள ராக மே பாட

கந்தைத்துணியால் மூடக் கணங்கள் வெருவி யோட 

இந்தப்பாவியைத்தேட-இரக்கக் கண்ணீரோட


2. அளவில்லாதவர் நீரல்லோ?-நீர் தேடி வந்த 

அடிமைகள் நாங்களல்லவோ?

பழவேடமல்லா லிந்தப் பவத்தைத் துரத்தி வெல்ல 

தலையணை யொரு கல்லோ!சப்ரமஞ்சம் புல்லோ!


3.மாட மண்டபமில்லையோ?-நீர் தெய்வீகமாய்

வந்து பிறக்க வெல்லையோ! 

ஆடம்பரமில்லையோ? ஆதரிப்பாரில்லையோ? 

கூடமில்லையோ! மாட்டுக்-கொட்டிலுமக் கெல்லையோ!


Innearam Vanthathethaiyaa - Ennaiyaa Swami

Innearam Vanthathethaiyaa 


1.Manthaiyai Devareer Theada Sammanasoorkal

Mangala Raagamae Paada

Kanthai Thuniyaal Mooda kanangal Vearuviyoda

Intha paaviyai Theada - Irakka Kanneeroda


2.Azhavillathavr Neerallavo Neer Theadi Vantha

Adimaigal Nangalallavo

Palaveada mallalintha pavaththai Thuraththi Vella

Thalaiyanai Yoru Kallo Sapramanjam Pullo


3.Maada Mandapamillaiyo Neer Deiveegamaai

Vanthu Pirakka Vellaiyo

Aadambaramillaiyo Aadharippaarillaiyo

Koodamillaiyo Maattu Kottilumak keallaiyo 





إرسال تعليق (0)
أحدث أقدم