குணம் அடை சீர்கெட்ட - Gunam Adai seerketta
1. குணம் அடை, சீர்கெட்ட
ஆதாமின் ஜாதியே;
தெளிவடை நீ, மெத்த
இருண்ட லோகமே;
உனக்கு ரட்சிப்பாக
மகா தயாபரர்
மானிட ரூபமாக
இப்பாரில் தோன்றினர்.
2. கறைகள் நீங்க நெஞ்சை
சுத்திகரியுங்கள்;
கர்த்தாவுக்கு வழியை
செவ்வைப்படுத்துங்கள்,
நொறுக்கப்பட்ட ஆவி
அவருக்கேற்றது;
குணப்படாத பாவி,
கெடுநாள் கிட்டுது.
3. கர்த்தாவே, என் உள்ளத்தை
நீர் சுத்தஞ் செய்திடும்;
சிறந்த உம்தன் மீட்பை
என் கண்கள் காணட்டும்;
நான் நித்தம் உம்மைப் போற்றும்
களிப்புண்டாகவே
என் நெஞ்சில் நீரே வாரும்
கடாட்சமாகவே.
1.Gunam Adai seerketta
Aadhamin Jaathiyae
Thealivadai Nee meththa
Irunda logamae
Unakku Ratchipaaka
Maa Thayaparar
Manida Roopamaaga
Ippaaril Thontrinaar
2.karaikal Neenga Nenjai
Suththikariyungal
Karthavukku Vazhiyai
Sevvai paduthungal4Norukkapatta Aavi
Aavarukkettrathu
Gunapadatha Paavi
Kedunaal Kittuthu
3.Karthavae En Ullaththai
Neer suththam sithidum
Sirantha Unthan Meetppai
En Kangal Kaananttum
Naan Niththam Ummai Pottrum
Kalipundagavae
En Nenjil Neerae Vaarum
Kadatchamagavae