எந்தை எந்தை முந்துந் திருமகன் - Enthai Enthai Munthu Thirumagan
1. எந்தை எந்தை முந்துந் திருமகன்
நிந்தை நிந்தை உந்தும் புவிதனில்,
விந்தை! விந்தை! மனுவுருவாய்
வந்தனர்; சந்தோடமே!
ஆ! சந்தோஷம்! துதி சொல்லுவோம்;
ஆ! சந்தோஷம்! குதி கொள்ளுவோம்;
ஆ! சந்தோஷம்! கன மகிமை
அவர் என்றும் பெறுகுவரே
2. வானோ ரானோர், ஞானிகள், இடையர்கள்
கான தான மான பல செயல்
வான மீன நடையொடுமே
மோனம் மிகுதனமே.
தங்கள் சிறுபுல் லணைதனிலே
எங்கண் மணிஅனை அருகினிலே
இங்கிங் கெனவழு கிறகுரலோ!
இது பரன் உறு திறலோ?
3. துங்கம் துங்கம் துங்கம் நிறை வலு
சிங்கம் சிங்கமு கங்கண் டலகைப
துங்கும் சிங்கும் பங்கமுறும்
மங்கும் மடிவுறுமே.
மாபல சாலிகள் பாலரொடும்
மாகவி பாடுமின் ஆடவரும்
பூவையர் ஆடுவிர் ஆவலொடும்
புவிபுரந் திடுவோர் வந்தார்.
Enthai Enthai Munthu Thirumagan
Ninthai Ninthai Unthum Puvithanil
Vinthai Vinthai Manuvuruvaai
Vanthanar Santhodamae
Ah! Santhosam Thuthi Solluvom
Ah! Santhosam Kuthi Kolluvom
Ah! Santhosam Kana magimai
Avar Entrum Peruguvarae
2.Vaanoranoor Gnanigal Idaiyarkar
Kaana Thaana Maana pala Seayal
Vaana Meena Nadaiyodumae
Moonam Miguthanamae
Thangal Siru pullanaithanilae
Engan Mani Anai Arukinilae
Engingkena Vazhu kuralo
Ithu Paran Uruthiralo
3.Thungam Thungam Thungam Nirai Valu
Singam Singa mugankandalagai
Thungum Singum Pangamurum
Mangum Madiurumae
Maabala saalikal Paalarodum
Maa kavi paadumin Aadavarum
Poovaiyar Aaduveer Aavalodum
Puvi Purainthiduvoor Vanthaar