ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? - Aarivaraaro Yesu Aarivaraaro
பல்லவி
ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ?
சரணங்கள்
1. மாட்டகத்தில் பிறந்தவரோ?
மந்தை ஆயர் பணிந்தவரோ!
நாட்டுக்கு நன்மை வர
நாதனா யுதித்தவரோ? – ஆரிவ
2. தீர்க்கத்தரிசிகள் முன்
திடனாயுரைத்தவரோ?
ஆர்க்கும் உரிமையுள்ள
அன்பான தங்கமிவர்! – ஆரிவ
3. வானத்தின் நட்சத்திரம்
வழி நடத்தும் சாஸ்திரிகள்
தானாயெழுந்து வந்து
தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ
4. அலகைத் தலை நசுக்க
அவனிதனில் வந்தவரோ!
உலகை உயிர் கொடுத்து
உன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ
Aarivaraaro Yesu Aarivaraaro
1.Maattakathil Piranthavaro
Manthai Aayar Paninthavaro
Naattukku Nanmai Vara
Naathanaai Uthithavaro – Aariva
2.Theerka dharisikal Mun
Dhidanaai Uraithavaro
Aarkkum Urimaiulla
Anbanaa Thangamivar – Aariva
3.Vaanathin Natchathiram
Vazhi Nadathum Sasthirikal
Thaanai Elunthu Vanthu
Thazhk Panintha Kiristhivaro – Aariva
4.Alagai Thalai Nasukka
Avanithanil Vanthavaro
Ulagai Uyir Koduthu
Unnathathuku Eluthavaro – Aariva