ஆதாமின் பாவத்தாலே அரூபனுரூபமான - Aadhamin Paavaththalae Arupanuroopamaana
பல்லவி
ஆதாமின் பாவத்தாலே அரூபனுரூபமான
அதிசயமிதோ பாரும்.
அனுபல்லவி
மாதேவை புத்திரரான மானிடர் குழாங்களே நீர்
வல்லமைப் பிதாவின் ஒரு மைந்தனைச் சந்திக்க வாரும்.ஆதா
சரணங்கள்
1.ஆதிபிதாவின் கிருபாசனத்தைத் துறந்தார்
அழகான மோட்ச செல்வ பாக்கியத்தை மறந்தார்
பாதகந்தீர வேண்டி பெத்தலையிற் சிறந்தார்
பராபரவஸ்து வானோர் பாலனாகப் பிறந்தார். - ஆதா
2. உன்னத வஸ்துவா னோருலகத்தை நேசித்தார்
ஒப்பிலாத் தேவ தேவன் மனுஷரையாசித்தார்
தன்னொளிவை விளங்கத் தானே பிரகாசித்தார்
சாதிகளுக்குத் தயவாயுப தேசித்தார். - ஆதா
3. மந்தையாயர் சந்திக்கச் சந்தோடமே விண்டார்
வான நாட்டைப் பிரிந்து மாட்டுக்கொட்டிலைக் கண்டார்
விந்தைத் திரு முதலார் கந்தைத் துணியைக் கொண்டார்
வேத காரணர் தானேமேவி தாயின் பால் உண்டார் .- ஆதா
4. கன்னி மரியத் தாயார் சின்னக் குமாரனானார்
காரிருள் சூழ்ந்த கொடுங்கானகத்துக்குப் போனார்
மன்னன் றவீதரசன் வங்கிஷத் திருக் கோனார்
மாறுதலன்றி யென்றுந் தானே யிருக்குந் தானார்.- ஆதா
5. விண்ணவர் தேட்டாரே மிக்க கொண்டாட்டாரே
வேதநாயகன் சொன்ன பாட்டையுங் கேட்டாரே
மண்ணுலகனைத்தையும் வலிமையாய் மீட்டாரே
வந்தாரைத் தள்ளி விடமாட்டாரே நாட்டாரே.- ஆதா
Aadhamin Paavaththalae Arupanuroopamaana
Adisayam Itho Paarum!
Ma-Devai Puththirarana Maanidar Koozhangalae Neer
Vallamai Pithavin Oru Maninthanai Santhikka vaarum
1.Aadhi Pithavin Kiru paasanathai Thuranthaar
Alagana Motcha selva bakkiyaththai Maranthaar
Paathakan Theera veandi Bethalaiyil Siranthaar
Parapars vasthu Vanoor Paalanaga piranthaar
2.Unnatha Vasthu vanoor ulagaththai Neasiththaar
Oppila deva devan manusharai aasiththaar
Than oliyai vilanga thanae pirakasiththaar
Jaathikaluku Thayavaai obesiththaar
3.Manthai Aayar Santhikka Santhodamae Vindaar
Vaana nattai pirinthu Mattu kottidilai kandaar
Vindhai Thiru Mudhalaar Kanthai Thuniyai kondaar
Vedha Kaaranar Thaanae Meavi Thaayin Paal Undaar