என் வாழ்நாளெல்லாம் - En Vaal Naal Ellam

 என் வாழ்நாளெல்லாம் - En Vaal Naal Ellam 


என் வாழ்நாளெல்லாம்

நீர் உண்மையுள்ளவரே

என் வாழ்நாளெல்லாம்

நீர் என்றும் நல்லவரே

எந்தன் சுவாசம் உள்ள நாள்

வரையில் பாடுவேன்

உந்தன் நன்மைகளை என்றும் .


நேசிக்கின்றேன்

அழகே என் இயேசுவே

வாழ்நாளெல்லாம் வழுவாத

கரம் என்னோடே

நம் கண் விழிக்கும் நேரம் முதல்

என் கண்கள் உறங்கும் வரையிலும்

பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் .


உம் சத்தமே அது தேனிலும் மதுரமே

பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே

என் இருளில் வெளிச்சம்

தகப்பனும் நண்பனும் நீரே

வாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் .


நன்மைகள் என்றும் தொடருமே

அறியா உம் நன்மைகள்

என்னை பின் தொடருதே

அசையாத உம் நன்மைகள்

என்னை பின் தொடருதே .


எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே

அழகே என் இயேசுவே

அழகான உம் நன்மைகள்

என்னை பின் தொடருதே .





إرسال تعليق (0)
أحدث أقدم