அற்பமான துவக்கம்
உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். யோபு 8:7
ஜோஜ் ராடு என்பவர் ஒரு பிரபலமான கார் கம்பெனியின் விற்பனையாளர். அந்த கார் கம்பெனியில் அதிகமான கார்களை விற்பனை செய்கிறவர்களுடைய பெயர் அறிவிப்பு பலகையில் வரும். இவருக்கு தன் பெயர் அறிவிப்பு பலகையில் வரவேண்டும் என்று அநேக ஆண்டுகள் விரும்பியும் கிடைக்கவில்லை. பிற்பாடு அவர் செய்ததை கவனியுங்கள். அந்த கம்பெனியில் கார் வாங்கின எல்லாருக்கும் அவர் ஒரு நன்றி கடிதம் எழுதி அனுப்பினார். அந்த ஆண்டு அவர் பெயர் அறிவிப்பு பலகையில் வந்தது மட்டும் அல்ல, கார் விற்பனையில் கின்னஸ் சாதனை படைத்தார். எத்தனை ஆச்சரியம்!
எந்த ஒரு காரியத்தின் துவக்கமும் அற்பமாகவே இருக்கும். எல்லாம் இருந்தும் அல்லது வைத்துக்கொண்டும் எந்த ஒரு காரியத் தையும் துவக்குவதில்லை. ஒரு காரியம் எப்படி ஆகும் என்றும், அது எப்படி முடியும் என்றும் ஒருவருக்கும் தெரியாத போது, எவ்வாறு ஒரு காரியத்தை சம்பூரணமாக துவங்க முடியும் ? எந்த ஒரு காரியத்தை துவக்கவும் திட்டங்கள் வேண்டும், ஆயத்தங்கள் வேண்டும், கொஞ்சம் முதலீடு வேண்டும். அப்படி இருந்தால் தான் முடிவு பெரிதாக இருக்கும்.
"அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?" சகரியா 4:10 பரிசுத்த வேதாகமத்தில் சிலர் எப்படி சம்பூரணமடைந் தார்கள் என்று பார்க்கலாம். ஈசாக்கை குறித்து வாசிக்கும்போது,"அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்." ஆதி 26:13 அதுபோலவே யோசேப்பை குறித்தும் நாம் வேதத்தில் வாசிக்கலாம். "நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட் டான்." ஆதி 41:52. மேலும் நாம் தாவீதை குறித்து வேதத்தில் வாசிக்கும் போதும் இவ்விதமாகவே எழுதப்பட்டிருக்கின்றது. "சவுலின் குடும்பத்துக் கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது தாவிதுவ வரப் பலத்தான் சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப் பட்டுப் போனார்கள்." 2சாமு 3:1. அன்பானவர்களே ஒரு பூரணமான முடிவை நோக்கியே இவர்களைப் போல பயணிக்கின்றோம்.
நம்முடைய முடிவு எத்தனை சம்பூரணமானது என்று ஒருவரா லும் சொல்ல இயலாது. நம்முடைய தேவன் நாம் இழந்த சகலவற்றையும் திரும்ப சம்பூரணமாக கொடுக்கின்றவர் என்று யோவேல் தீர்க்கதரிசி மூலமாக கூறுகின்றார். யோவேல் 2:23-26. தேவன் தாமே நமக்கு சம்பூர ணமாக கொடுக்கின்றவர். அவருக்கு நாம் நன்றி சொல்லுவோமானால் அல்லது நன்றியுள்ளவர்களாக இருப்போமானால் சகல சம்பூரணத்தினா லும் திருப்தியாக்குவார். நன்றியோடு துதிப்போம்.