Maaradha Paasam Tamil Christian Song lyrics - மாறாத பாசம் மறையாத நேசம்

 Maaradha Paasam song lyrics - மாறாத பாசம் மறையாத நேசம்


அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதே

அப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2


மாறாத பாசம் மறையாத நேசம்

இயேசப்பா உங்க அன்பு தான் -2


1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்

மரித்த அன்பு இயேசுவே

பாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்

பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம் 


2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம் 

மனசே உடையுதே அப்பா

இரத்தம் சிந்தினதை காயங்களும் 

பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத பாசம்


3.இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான் 

ஒருபோதும் கைவிடவில்லையே

இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான் 

ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே-2- மாறாத பாசம்



Post a Comment (0)
Previous Post Next Post