Um sitham song lyrics - உம் சித்தம்

 Sitham Sitham Um sitham song lyrics - சித்தம் உம் சித்தம்


சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும்

மாறாது மாற்றமே இல்லை அதுமாறுவதில்லை 

சத்தம் உம் சத்தம் உம் சித்தத்தை  நினைப்பூட்ட 

மறப்பதே இல்லை அது மறந்ததே இல்லை -2


நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும் 

இலக்கிற்கு தடையே இல்லை

திட்டத்தின் மையத்தில் நீர் என்னை

வைத்ததால் சருக்கில்லை முன்னே செல்ல 


சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும் மாறாது 

மாற்றமே இல்லை அது மாறுவதில்லை 

சத்தம் உன் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்ட 

மறப்பதே இல்லை அது மறந்ததே இல்லை


யாக்கோபை போல எத்தனாக வாழ்ந்ததும்

யோசேப்பை போல குழியிலே வீழ்ந்ததும் -2

வாழ்ந்தவர் வீழ்ந்தாலும் கையில் எடுப்பீர் 

வீழ்ந்தவர் வாழ்ந்ததாக மாற்றி அமைப்பீர் 

திட்டம் வைத்தீரே என்னை

இஸ்ரவேலாய் மாற்றிட 

சித்தம் கொண்டீரே

என்னை அரியனையில் ஏற்றிட 

உமது திட்டங்கள் தோர்ப்பதில்லை - சித்தம்


மோசேயைப் போல் எகிப்திலே  இருந்ததும் 

தானியலை போல பாபிலோனில் வளர்ந்ததும் -2

வளர்ந்ததின் காரணம் அறிந்து கொண்டேன் 

வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன் 

திட்டம் வைத்திட என்னால்

இஸ்ரவேலை மீட்டிட சித்தம் கொண்டீரே

என்னால் உம் நாமம் உயர்ந்திட 

உமது தரிசனங்கள் தோர்ப்பதில்லை - சித்தம்


Sitham Sitham Um sitham song lyrics in English



Post a Comment (0)
Previous Post Next Post