Thalaimurai Thangum Avar kirubai song lyrics - தலைமுறை தாங்கும் அவர் கிருபை
தலைமுறை தாங்கும் அவர் கிருபை
தாங்கிடும் என்னை நடத்திடுமே
இயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் -2
என்னை எழும்பச் செய்பவர் உயர்த்துபவர்
என்னை என்றென்றும் வாழ வைப்பவர் -2
கர்த்தர் செய்வதை கண்கள் காணும்
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்
கர்த்தர் செய்வதை கண்கள் காணும்
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்
1.காற்றை என் கண்கள் காணலையே
மழையும் என் வாழ்க்கை பார்க்கலையே
காற்றை என் கண்கள் காணலையே
மழையும் என் வாழ்க்கை பார்க்கலையே
வறண்டு போன என் வாழ்க்கையை
உந்தன் கிருபை கண்டதே
வாய்க்கால் ஒவ்வொன்றாய்
நிரம்பிடுதே உந்தன் தயவு பெரியதே - என்னை எழும்ப
2.அழிக்க நினைக்கும் மனிதரின் முன்
வாழ வைக்கும் தெய்வம் அவர்
எதிர்த்து நிற்கும் எதிரியின் முன்
உயர்த்தி வைக்கும் தெய்வம் அவர்
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம்
என்னை சூழ்ந்து கொள்ளுமே விலகிப் போகாமல்
கடைசி வரை என்னை வாழ வைக்குமே - என்னை எழும்ப