மேலான அன்பு - melana anbu
மேலானது மேலானது
உந்தன் அன்பொன்றே மேலானது
மேலானது மேலானது
உந்தன் அன்பொன்றே மேலானது
எதிரியை நேசிக்க கற்று தந்தது
சிலுவை அன்பு மேலானது
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்
பழிவாங்க எனக்கு சொல்லாதது
உந்தன் அன்பொன்றே மேலானது - 2
எனக்காய் இரத்தம் சிந்திய
சிலுவை அன்பு மேலானது
எனக்காய் பாடுகளை கொண்ட
அளவற்ற அன்பு மேலானது
உந்தன் அன்பொன்றே மேலானது - 2
தாயினும் மேலாய் நேசிக்கும்
உந்தன் அன்பு மேலானது
தள்ளப்பட்ட என்னையும்
உயர்த்தின அன்பு மேலானது
உந்தன் அன்பொன்றே மேலானது - 2
ஒரு மைல் தூரம் பலவந்தம் பண்ணினால் இரண்டு மைல் தூரம் போக சொன்னீர்
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுபக்கம் காட்டும் அன்பை எனக்கு சொல்லி தந்தீர்
உந்தன் அன்பொன்றே மேலானது
அந்த அன்பொன்றே மேலானது
உந்தன் அன்பொன்றே மேலானது
அந்த அன்பொன்றே மேலானது.