என் இயேசுவின் சந்நிதியில் - En Yesuvin Sannidhiyil
என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதே
துதி கீதங்கள் பாடிடுவேன்.
சரணங்கள்
1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்
கருணைக்கரம் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே. - என்
2.பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே. - என்
3. மோட்ச பாக்கியத்தை நினைத்திடவே
பொங்குதே யுள்ளம் சந்தோஷத்தால்
வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்ம நேசர்
என்னைத் தம்முடன் சேர்த்திடவே. - என்
4. பாரில் பரிசுத்த ஜீவியத்தை
தேவ பயத்துடன் காத்துக் கொள்வேன்
எந்தன் ஆவியும் ஆத்ம சரீரம் முற்றும்
என்றும் கர்த்தருக்கொப்பு விப்பேன். - என்
5. தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க
கர்த்தர் இயேசு தம் மகிமையுடன்
வானில் வெளிப்படுவார் சீயோன் இராஜனவர்
என்னை சீயோனில் சேர்த்திடுவார். - என்