என்னை நெஞ்சில் சுமக்கும் - Ennai Nenjil Sumakkum
என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு,
அவர் நினைவில் எப்போதும் நான்
சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து,
கலந்தார் என் உயிரோடு தான்
பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி,
அடிக்கப்பட்டார் எனக்காக தான்
என்மேல் பொழிந்த அன்பை நினைத்தால் கண்கள் குளமாகுதே
என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு,
அவர் நினைவில் எப்போதும் நான்
1) என் வாழ்வில் பெருந்துயரம் வந்ததால்,
"மறந்தாரோ?" என்றெண்ணினேன்
நெருக்கங்கள் வந்தாலும் வழுவாமல் காப்பவரை மறந்தேன்
சத்துருவின் தந்திரங்கள் நேசர் அன்பை மறைக்க முயல
மனதில் உதித்த சிலுவைக் காட்சி அதனை மேற்கொண்டதே
என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு,
அவர் நினைவில் எப்போதும் நான்
2) உலகத்தின் வழிதன்னில் நடந்தாலே தோள் தட்டி ஊர் மெச்சுமே
இயேசுவை போலவே உத்தமவழி நடந்தால் பகை மிஞ்சுமே
நெடுந்தூரமோ, குறுகியதோ, மேடுபள்ளம் கொண்டதுவோ
எதுவானாலும் அவரின் பின்னால்,
தொடர வாஞ்சிக்கிறேன்
என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு,
அவர் நினைவில் எப்போதும் நான்
சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து,
கலந்தார் என் உயிரோடு தான்
பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி,
அடிக்கப்பட்டார் எனக்காக தான்
என்மேல் பொழிந்த அன்பை நினைத்தால் கண்கள் குளமாகுதே
என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு, அவர் நினைவில் எப்போதும் நான்