தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே - Thothira Pandikai Aasaripomae
பல்லவி
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே - தோத்திர
சரணங்கள்
1.பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் - தோத்திர
2.பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே - தோத்திர
3.கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே-தோத்திர
4.நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம்செய்து-தோத்திர
5.இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கின்குணப் பலன்வைத்துத் - தோத்திர
Thothira Pandikai Aasaripomae
Thooyagam Ooriya Bakthiyaal Naamae
1.Paaththiram Ithuvena Pagar Udal Poralaavi
Paramanu karpanam Sei Parivu Niraiya Meavi
2.Panithuli Nilaththinai Panpaduththinathantrae
Pagarumugil Kolumai Paduththiya Thenninantrae
3.Kadavulae Payirukku Kanamazhai Peiviththaarae
Kaangaiyaal Kathirvalam Kathikkavum uiththaarae
4.Nenjaththil Deiva Anbaam Nithinigar Vithau Peithu
Niththiya Samaathaam Niruva vinnapam Seithu
5.Iraivan Raththa Kaiyaal Ratchanyam Arulviththai
Idhayaththil Vithaithathar Kinguna Balan Vaiththu