நீதியாமோ நீர் சொல்லும் - Neethiyamo Neer Sollum
பல்லவி
நீதியாமோ நீர் சொல்லும் - ஓய் !
நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்
சரணங்கள்
1.ஆதுலர்க் கீவதே பாக்கியம் -பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம் -ஓகோ!
பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் -மோட்ச
பாதை நடக்கில் சிலாக்யம் - நீதி
2.தரித்திரக் கிரங்குவோன் உடனே -இடுவான்
தற்பரனுக் கவன் கடனே -என்று
கருத்துடன் கருதியில் திடனே -உரைத்தார்
கடுநெஞ் சகல் மானிடனே - நீதி
3.அன்புடன் விதவையும் போட்ட - காசை
அதி வியப்பாய் யேசு காட்டப் -புகழ்
இன்புடன் அவள் மிசை சூட்ட -அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட - நீதி
4.பிறர் புகழும்படி இன்றே -செய்தால்
பிரயோசனமிலை என்றே, -பரன்
மறையதில் விளம்பினார் நன்றே; -அம்
மாதிரி விலகாது நின்றே - நீதி
5.பரிதானம் வாங்குதல் தீது - அதைப்
பறித்தறம் செய்தல் தகாது -உமக்
குரியதில் ஈவேது போதம் -இதில்
ஊன்றி இருப்பதே நீதம் - நீதி
6.ஏழைகளுக் கீயாது ஆஸ்தி -ஐயே
ஈண்டு சேர்ந்திடில் என்ன கீர்த்தி -இதோ?
வாழுல கடைந்திடில் நேர்த்தி -என்றும்
வாழலாம் அதுவே மா பூர்த்தி - நீதி
Neethiyamo Neer Sollum Ooi
Neariyullorae Aram Seiyaathirunthidil
1.Aathulark Keevathae Baakkiyam Pirarai
Aathariththiduvathae Yokkiyam Ooho
Paathagam Seiyyil Neer Bakkiyam Motcha
Paathai Nadakkil Silakkiyam
2.Thariththiran Kiranguvoan Udanae Iduvaan
Tharparanukku Avan Kadanae Entru
Karuththudan Karuthiyil Thidanae Uraiththaar
Kadu Nenjjagal Maanidanae
3.Anbudan Vithavaiyum Potta Kaasai
Athi Viyappaai Yeasu Kaatta Pugal
Inbudan Aval Misai Sootta Athai
Evarkalum Agaththinil Naatta
4.Pirai Pugalum Padi Intrae Seithaal
Pirayosanamilai Entrae Paran
Maraiyathil Vilambinaar Nantrae Am
Maathiri Vilagaathu Nintrae
5.Parithaanam Vaanguthal Theethu Athai
Paritharam Seithal Thagaathu Uma
Kuriyathi Eeveathu Potham Ithil
Oontri Iruppathae Neetham
6.Yealaikaluku Keeyaathu Aasthi Aiyae
Eendu Seanthidil Enna Keerththi Itho
Vaalula Kadainthidil Nearththi Entrum
Vaalalaam Athuvae Maa Poorththi