கர்த்தருக்குக் காணிக்கையிதோ - Kartharuku Kaanikai Itho
பல்லவி
கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!
அனுபல்லவி
கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
பத்திலொன்று நான் கொடுப்பேன்,
சத்தியக் கிறிஸ்து நாதர்
சபையை வர்த்திக்கவேணும். - கர்த்தருக்கு
சரணங்கள்
1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய்
அறிவு வளர வேணும்,
தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில்
சகலரும் போற்ற வேணும்,
கனிவாய்ப் போதகர் வேதம்
கற்றறிந்து சொல்லவேணும்,
கணக்காய் இதன் செலவு
கட்டி வரவேணும், அய்யா! - கர்த்தருக்கு
2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசேதேக்குக்கு
அனைத்திலும் தந்ததையே!
மா பிரியமாக வாசித்தேன்,-இஸ்ரயேல் பெத்தேல்
வள்ளற்குச் செய்பொருத்தனையே,
ஆண்டவர் பரன் அவர்கட்
கனைத்தும் ஆசீர்வதித்துத்
தாபரம்த மதடி கீழ்த்
தத்தளித்த தெல்லாங் கேட்டேன். - கர்த்தருக்கு
3. கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன்-இதோ! இத்தனை
கூடினதைக் கொண்டிதோ வந்தேன்,
நஞ்சை விளை வினிலோர் பாகம்-சேர்த்து வைத்தேனான்,
நாலாவகை வரத்திற் கொஞ்சம்,
புஞ்சை பல போகத்திலும்
போட்டு வைத்தேனான் குறுணி
புத்தகக் கணக்கில் கண்ட
தித்தனைத் தொகையுமாச்சு. - கர்த்தருக்கு
Kartharuku Kaanikai Itho Thammaiyae Thantha
Karththarukku Kaanikkai Itho
Karththarukku Kaanikkaiyaai
Paththilontru Naan Koduppean
Saththiya Kiristhu Naathar
Sabaiyai Varththikka Veanum
1.Aniyaayam Neenga Veanum Ulagilae Mei
Ariuv Valara Veanum
Thaniyeaga Mei Devanai Nar Deasaththil
Sagalarum Pottra Veanum
Kanivaai Pothagar Vedham
Kattrainthu Sollaveanum
Kankkaai Ithan Seaavu
Katti Varaveanum Aiyya
2. Abiraham Paththil Ontraiyae Melkiseathekku
Anaiththilum Thanthaiyae
Maa Piriyamaaga vaasiththean Israyeal Beththel
Vallarakku Sei Poruththanaiyae
Aandavar Paran Avarkat
Kanaiththum Aaseervathithu
Thaabaram Mathadi Keezh
Thaththaliththa Thollan Keattean
3.Konjam Konjamaaga Searththean Itho Iththanai
Koodinathai Konditho Vanthean
Nanjia Vilai vinilor Paagam Seaththu Vaithenaan
Naalavagai Varaththikir Konjam
Punjai Pala Pogaththilum
Poattu Vaiththaenaan Kurini
Puththaga kanakkil Kanda
Thiththanai Thogaiyumaatchu