தேவா இவ்வீட்டில் இன்றே - Devaa Evveettil Intrae Meavi

 தேவா இவ்வீட்டில் இன்றே  - Devaa Evveettil Intrae Meavi 


பல்லவி


தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை

செய்வாய், எமது கோவே!


சரணங்கள்


1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள்

முன்னவா, சத்ய வேதா!

பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு

புண்ணியனே, மா நீதா!-இங்கு

நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை

பண்ணுவாய், வினோதா!

மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது,

ஜீவனே, யேசு கோனே,-ஏழைப்

பாவிகள் மீட்பன் தானே. - தேவா


2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி

மேன்மையுடன் சிநேகம்

அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக.-என்றும்

அத்தனோ டுற வாக,-ஜெப

துந்துமிகள் முழங்க,-ஐக்யம்

பந்தமுடன் இலங்க,

தந்தைப் பரனே, இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்

சொந்தமுடன் ஈவாயே,-இவர்

சந்ததம் வாழ நீயே. - தேவா


3. இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே,-பரன்

இஷ்டப்படி நடந்தே,

அங்கம், மனது யாவும் பங்கம்இன்றித் தொடர்ந்தே,-இவர்

அனுதினமும் மகிழ்ந்தே,-உயர்

அம்பர வீட்டில் சேர்ந்து,-மிகு

கெம்பீரமாக வாழ்ந்து,

புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்

இங்கிதமாய்க் கொண்டாட,-நிதம்

மங்களக் கவி பாட. - தேவா



Devaa Evveettil Intrae Meavi  Elunthu Varavae Thayai

Seivaai Emathu Kovae


1.Moovar Oruvaraana Devaa Kiristhu Naathaa Engal

Munnavaa Sathya Vedhaa

Poovil Emakkuthavai Yaarumillai Em Thaathaa Yeasu

Punniyanae Maa Neethaa Ingu

Nannuvaai Mei Pothaa Thayai

Pannuvaai Vinothaa

Meavi Unatharulai Eevaai Evveettin Meethu

Jeevanae Yeasu Konae Yealai

Paavigal Meetpan Thaanae 


2.Vinthaiyudan Kalippum Santhamudan Undaaga Athi

Meanmaiyudan Sineagam

Anthamudan Pearugi Entha Paavamum Yeaga Entrum

Aththano duravaaga Jeba

Thunthumigal Mulanga Aikyam

Panthamudan Elanga

Thanthai Paranae Intru Untran Arul Niraivaai

Sonthamudan Eevaayae Evar

Santhatham Vaazha Neeyae


3.Ingu Vasikkum Mattum Thungan Mozhi Kisanthae

Istapadi Nadanthae

Angam Manathu Yaavum Pangam Intri Thodarnthae Evar

Anuthinamum Magilnthae uyar

Ambara Veettil Searnthu Migu

Kembeeramaaga Vaalnthu

Pungamudan Nithamum Thangi Yeasu Paranil

Engithamaai Kondaada Nitham

Mangala Kavi Paada

தேவா இவ்வீட்டில் இன்றே  - Devaa Evveettil Intrae Meavi


Post a Comment (0)
Previous Post Next Post