வெள்ளை அங்கிகள் தரித்த - Vellai Angikal Tharitha
பல்லவி
வெள்ளை அங்கிகள் தரித்த
விமல முத்தர் இவர் யார்?
அனுபல்லவி
கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
கருணை வள்ளல் முன் நிற்கும். - வெள்ளை
சரணங்கள்
1. நானாதிக்கிலுமிருந்து
நயந்து வந்தவர் இவர்;
கோணாது துன்பக் கடலில்
குளித்து வந்தவர் இவர். - வெள்ளை
2. குருத் தோலைகள் பிடித்துக்
கொற்றவனைச் சூழநிற்கும்
பெருத்த கூட்டத்தார் இவர்;
பேரன்பின் அடியார்களாம். - வெள்ளை
3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை
அடைந்த உத்தமர் இவர்;
தேட்டமுடனே நாயனைச்
சேவித்து நிற்கின்றார் நித்தம். - வெள்ளை
4. பசிதாகம் யாவுமற்றார்;
பாக்கிய நிலைமை பெற்றார்;
உச்சித மோட்சத்தின் கண்ணீர்
உகுக்கா வாழ்வினை யுற்றார். - வெள்ளை
Vellai Angikal Tharitha
Vimala Muththar Evar Yaar
Kallamilla Aattukutti
Karunai Vallal Mun Nirkkum
1.Naanaathikkilumirunthu
Nayanthu Vanthavar Evar
Konaathu Thunba Kadalil
Kuliththu Vanthavar Evar
2.Kuru Tholaikal Pidiththu
Kottravanai Soozhanirkum
Pearuththa Koottaththaar Evar
Pearanbin Adiyaarkalaam
3.Aattu Kuttiyaalae Meetpai
Adaintha Uththamar Evar
Theattamudanae Naayanai
Seaviththu Nirkintaar Niththam
4.Pasithaagam Yaavumattaar
Bakkiya Nilamai Peattaar
Utchitha Motchaththin Kanneer
Ugukkaa Vaalvinai Yuttaar