வான நகரதின் மேன்மையென - Vaana Nagarathin Meanmaiyena

 வான நகரதின் மேன்மையென - Vaana Nagarathin Meanmaiyena


வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன

வலன் நலவருக்கருள்


சரணங்கள்


1.பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்

பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே

தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்

ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான - வான


2.அங்கு நோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்

அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்

பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்ப தில்லை

புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் - வான


3.அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான

அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம்

மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்

வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் - வான


4.நேயமுற் பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்

நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும்

ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி

உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள- வான


Vaana Nagarathin Meanmaiyena

Soluvom Kana Valan Nalavarukkarul


1.Paanolirathnangal Asthipaaramaa Thiruvaasalkal

Panniru Muththukal Thearu Ponninmayamae

Theanilum Mathuram Thealivir Palingathaana Aarum

Jeevatharuvum Erukkum Sepparum Alagathaana 


2.Angu Noai Thunbam Visaaram Akramam Kanneer Thariththiram

Arpam Miruppathillai Sorpamaakilum

Pongiyae Mutchaththurukkal Porinu Kiluppathillai

Punniyanaar Sonnathiru Unnatha Erusalaiyaam


3.Annatha Kudikal Venmaiyaana Alangaaramaana

Archaya Uduppu Siramaanathir Kreedam

Mannavar Polae Aninthu Magimaiyin Aasanaththil

Vaaimaiyaaga Veettrippar Thooimaiyaana Antha Nal


4.Neayamur Pithakkal Theerkkar Ninmalan Apposthalarkal

Neethimaangal Ellavarum Thoothar Nallorum

Ooivathintri Thothra Keetha Utchitha Thonimulakki

Unnathanai Pottruvaarkal Pannarum Sirppathulla

வான நகரதின் மேன்மையென - Vaana Nagarathin Meanmaiyena


Post a Comment (0)
Previous Post Next Post