உம் நாமம் சொல்ல - Um Naamam Solla Solla

 உம் நாமம் சொல்ல - Um Naamam Solla Solla


உம் நாமம் சொல்ல சொல்ல

என் உள்ளம் மகிழுதைய்யா

என் வாழ்வில் மெல்ல மெல்ல

உம் இன்பம் பெருகுதைய்யா


1.மாணிக்கத் தேரோடு 

காணிக்கை தந்தாலும்

உமக்கது இணையாகுமோ

உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்

உமக்கது ஈடாகுமோ


2.பால் என்பேன் தேன் என்பேன்

உம் நாமம் என்னவென்பேன்

மறை என்பேன் இறை என்பேன் 

நீங்காத நினைவென்பேன்

உம் நாமம் என்னவென்பேன்


3.முதலென்பேன் முடிவென்பேன்

மூன்றில் ஒரு வடிவென்பேன்

முன்னவர் நீரே என்பேன்

வழி என்பேன் மொழி என்பேன் 

வற்றாத ஊற்றென்பேன்

வாழ்க உம் நாமம் என்பேன்



Um Naamam Solla Solla

En Ullam Magiluthaiyaa

En Vaalvil Mella Mella

Um Inbam Pearuguthaiyaa


1.Maanikka Thearodu

Kaanikkai Thanthaalum

Umakkathu Inaiyaagumo

Ulagame Vanthaalum 

Uravugal Nintraalum 

Umakkathu Eedaagumo


2.Paal Enbaean Thean Enbean

Um Naamam Ennavenbean

Marai Enbean Irai Enbean

Neengaatha Ninaivenbean

Um Naamam Ennavenbean


3.Muthalenbean Mudivenbean

Moontril Oru Vadivenbean

Munnavar Neerae Enbean

Vazhi Enbean Mozhi Enbean

Vattratha Oottrenbean

Vaalga Um Naamam Enbean



உம் நாமம் சொல்ல - Um Naamam Solla Solla

Post a Comment (0)
Previous Post Next Post