தூயர் ராஜா எண்ணிறந்த - Thuyar Raaja Ennirantha
1. தூயர் ராஜா, எண்ணிறந்த
வான் மீன் சேனை அறிவீர்
மாந்தர் அறியா அநேகர்
உம்மைப் போற்றப் பெறுவீர்
எண்ணரிய பக்தர் கூட்டம்
லோக இருள் மூடினும்
விண்ணின் ராஜ சமுகத்தில்
சுடர்போல விளங்கும்.
2. அந்தக் கூட்டத்தில் சிறந்த
ஓர் அப்போஸ்தலனுக்காய்
நாங்கள் உம்மைத் துதிசெய்வோம்
வருஷா வருஷமாய்
கர்த்தர்க்காக அவன் பட்ட
நற் பிரயாசம் கண்டதார்?
பக்தரின் மறைந்த வாழ்க்கை
கர்த்தர்தாமே அறிவார்.
3. தாசரது ஜெபம், சாந்தம்
பாடு, கஸ்தி யாவுமே
தெய்வ மைந்தன் புஸ்தகத்தில்
தீட்டப்பட்டிருக்குமே
இவை உந்தன் பொக்கிஷங்கள்
நாதா, அந்த நாளிலும்
உம் சம்பத்தை எண்ணும்போது
எண்ணும் அடியாரையும்.
1.Thuyar Raaja Ennirantha
Vaan Meen Seanai Ariveer
Maanthar Ariyaa Anegar
Ummai Pottra Pearuveer
Ennariya Bakthar koottam
Logam Irul Moodinum
Vinnin Raaja Samoogaththil
Sudar Pola Vilangum
2.Antha Koottaththil Sirantha
Oor Apposthalanukkaai
Naangal Ummai thuthi Seivom
Varusha Varushaamaai
Karththarkkaaga Avan Patta
Nar Pirayaasam Kandathaar
Baktharin Maraintha Vaalkkai
Karththar Thaamae Arivaar
3.Thaasarathu Jebam Saantham
Paadu Kasthi Yaavumae
Deiva Mainthan Pusthakaththil
Theettappattirukkumae
Evai Unthan Pokkishangal
Naathaa Antha Naalilum
Um Sambaththai Ennum Pothu
Ennum Adiyaaraiyum