கர்த்தரை அல்லாமல் தேவன் - Karththarai Allaamal Devan
கர்த்தரை அல்லாமல் தேவன் யார்?
நம் தேவனையன்றி கன்மலையும் யார்? (2)
கர்த்தரைப்போலப் பரிசுத்தர் இல்லை
நம் தேவனைப்போல் ஒரு கன்மலையும் இல்லை (2)
Chorus:
விழித்து எழு தேசமே விழித்து எழு
பாட்டுப்பாடு ஆர்ப்பரித்து பாட்டுப்பாடு (2)
எக்காள தொனியோடே கர்த்தரைத் துதி
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக
1. பசிக்கு தூதர்களின் அப்பம் கொடுத்து
பாறையிலிருந்து தண்ணீர் கொடுத்து (2)
வாக்குத்தத்த தேசத்திற்கு நடத்தி சென்ற
இஸ்ரவேலின் கன்மலையாம் கிறிஸ்து
உன்னையும் என்னையும் அழைக்கிறார்-2
நாம் கால் மிதிக்கும் தேசமெல்லாம் சுதந்தரிக்க
செல்வோம் நாம் சுதந்தரிப்போம்
2. திரளான பாகாலின் ஆசாரியர்களுக்கு
பதிலை கொடுக்க யாரும் இல்லை (2)
ஒரு தேவ மனிதனின் விண்ணப்பத்திற்கு
தேவனுடைய அக்கினி இறங்கி வந்தது.
உன்னையும் என்னையும் அழைக்கிறார்-2
தேவ வல்லமையை எங்கும் வெளிப்படுத்த
புறப்பட்டுப்போய் நாம் வெளிப்படுத்துவோம்
அல்லேலூயா அல்லே அல்லேலூயா(2)
நம் தேவனைப்போல் ஒரு கன்மலையும் இல்லை (2)